முகப்புவிளக்கம்An-Naas (114)

விளக்கம் An-Naas (114) — الناس

மக்கீ · 6 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ﴿١﴾

தூதரே!- நீர் கூறுவீராக: நான் மனிதர்களின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்

مَلِكِ ٱلنَّاسِ ﴿٢﴾

அவர்களின் விஷயத்தில் தான் விரும்பியவாறு செயல்படும் அவர்களின் அரசனிடம், அவனைத் தவிர வேறு அரசன் அவர்களுக்கு இல்லை

إِلَـٰهِ ٱلنَّاسِ ﴿٣﴾

அவர்களின் உண்மையான வணக்கத்திற்குரியவனிடம், அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் யாரும் இல்லை

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ ﴿٤﴾

இறைநினைவை விட்டும் கவனமற்றிருக்கும் மனிதனில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் இறை ஞாபகம் ஏற்படும் போது ஒதுங்கிக்கொள்ளும் ஷைத்தானின் தீங்கிலிருந்து (பாதுகாவல் தேடுகிறேன்)

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ ﴿٥﴾

அவன் மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ ﴿٦﴾

அவன் ஜின்களில் இருப்பதைப் போல மனிதர்களிலும் இருக்கிறான். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · An-Naas — الناس

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்