முகப்புவிளக்கம்At-Takaathur (102)

விளக்கம் At-Takaathur (102) — التكاثر

மக்கீ · 8 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿١﴾

மனிதர்களே!- செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமையடிப்பது உங்களை அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட்டும் திருப்பிவிட்டது

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ﴿٢﴾

நீங்கள் மரணித்து மண்ணறையில் நுழையும் வரை. كلا سوف تعلمون

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾

அவற்றைக் கொண்டு பெருமையடிப்பது அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதை விட்டும் உங்களைத் திருப்பிவிடக் கூடாது. அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். ثم كلاسوف تعلمون

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾

பின்னர் அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ﴿٥﴾

நிச்சயமாக உங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி திட்டமாக உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் பெருமைடிப்பதில் ஈடுபடமாட்டீர்கள்

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ﴿٦﴾

நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் நரகத்தை காண்பீர்கள். بلغ குர்ஆன் · தஃப்ஸீர்

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ﴿٧﴾

பின்னர் அதனை எவ்வித சந்தேகமுமின்றி உறுதியாகக் காண்பீர்கள்

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿٨﴾

பின்னர் அந்த நாளில் அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த ஆரோக்கியம் செல்வம் இன்னபிற அருட்கொடைகளைக் குறித்து உங்களிடம் கேள்வி கேட்பான். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · At-Takaathur — التكاثر

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்