وَٱلْعَصْرِ ﴿١﴾
அல்லாஹ் அஸர் நேரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்
முகப்பு›விளக்கம்›Al-Asr (103)
மக்கீ · 3 வசனங்கள்
وَٱلْعَصْرِ ﴿١﴾
அல்லாஹ் அஸர் நேரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்
إِنَّ ٱلْإِنسَـٰنَ لَفِى خُسْرٍ ﴿٢﴾
நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலும் அழிவிலும் இருக்கின்றான்
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ ﴿٣﴾
ஆயினும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து ஒருவருக்கொருவர் சத்தியத்தைக் கொண்டும் சத்தியத்தில் பொறுமையாக நிலைத்திருக்கும்படியும் அறிவுரை கூறியவர்களைத் தவிர. இந்தப் பண்புகளை உடையவர்கள் ஈருலகிலும் தப்பியவர்களாவார்கள். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை