முகப்புவிளக்கம்Al-Balad (90)

விளக்கம் Al-Balad (90) — البلد

மக்கீ · 20 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ ﴿١﴾

அல்லாஹ் மக்கா என்னும் புனித நகரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்

وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ ﴿٢﴾

தூதரே!- நீர் அங்கு செய்பவை கொல்லப்படத் தகுதியானவர்களைக் கொன்றது, கைதிகளாகப் பிடிக்கப்படத் தகுதியானவர்களை கைதிகளாகப் பிடித்தது உமக்கு அனுமதிக்கப்பட்டவையாகும். ووالد وما ولد

وَوَالِدٍۢ وَمَا وَلَدَ ﴿٣﴾

அல்லாஹ் மனிதஇனத் தந்தையைக் கொண்டும் அவனிலிருந்து தோன்றும் சந்ததியைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ ﴿٤﴾

மனிதன் இவ்வுலகில் அனுபவிக்கும் சிரமங்களினால் அவனைக் கஷ்டத்திலும் சிரமத்திலும் நாம் படைத்தோம். أيحسب أن لن يقدر عليه أحد

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ ﴿٥﴾

தான் பாவங்களை சம்பாதித்தால் தனக்கெதிராக யாரும் சக்திபெற மாட்டார்கள், தன்னை யாராலும் அது அவனைப் படைத்த இறைவனாக இருந்தாலும் தண்டிக்க முடியாது என்று நிச்சயமாக மனிதன் எண்ணிக்கொண்டானா? يقول أهلكت مالا لبدا

يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا ﴿٦﴾

அவன் கூறுகிறான்: “நான் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன், என்று.” بلغ குர்ஆன் · தஃப்ஸீர் أيحسب أن لم يره أحد

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ﴿٧﴾

தான் செலவழித்ததைக்கொண்டு பெருமையடிக்கும் மனிதன் தன்னை அல்லாஹ் பார்க்கவில்லை என்றும் தன் செல்வங்களில், தான் சம்பாதித்தது குறித்தும் செலவுசெய்தது குறித்தும் அவன் கணக்குக் கேட்க மாட்டான் என்றும் எண்ணிக் கொண்டானா? ألم نجعل له عينين

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ﴿٨﴾

நாம் அவனுக்கு பார்க்கக்கூடிய இரு கண்களை ஆக்கவில்லையா? ولسانا وشفتين

وَلِسَانًۭا وَشَفَتَيْنِ ﴿٩﴾

பேசக்கூடிய ஒரு நாவையும் இரு உதடுகளையும் (ஆக்கவில்லையா?)

وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ ﴿١٠﴾

நாம் அவனுக்கு நன்மையின் பாதையையும் அசத்தியப் பாதையையும் அறிவித்துக் கொடுக்கவில்லையா?

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ﴿١١﴾

அவன் சுவனத்தை விட்டும் பிரிக்கும் கணவாயைக் கடக்குமாறு வேண்டப்படுவான்

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ﴿١٢﴾

தூதரே!- சுவனம் செல்வதற்குக் கடக்க வேண்டிய கணவாயைக் குறித்து உமக்கு அறிவித்தது எது? فك رقبة

فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾

அது ஆண் அல்லது பெண் அடிமையை விடுதலை செய்வதாகும். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் أو إطعم فى يوم ذى مسغبة

أَوْ إِطْعَـٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ﴿١٤﴾

அல்லது உணவு கிடைப்பது அரிதான பசி, பட்டினியுடைய நாளில் உணவளிப்பதாகும், يتيما ذا مقربة

يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ﴿١٥﴾

தந்தையை இழந்த உறவுக்கார குழந்தைக்கோ. أو مسكينا ذا متربة

أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ﴿١٦﴾

அல்லது எதுவும் சொந்தம் இல்லாத ஏழைக்கோ ஆகும்

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ﴿١٧﴾

பின்னர் அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு வணக்கவழிபாடுகளைச் செய்வதிலும் பாவங்களிலிருந்து விலகியிருப்பதிலும் கஷ்டங்களிலும் பொறுமையைக் கடைபிடிக்கும்படியும் அவனுடைய அடியார்களுடன் பொறுமையாக நடந்துகொள்ளும்படியும், கிருபையைக்கொண்டும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுபவர்களில் உள்ளவராக இருப்பார்

أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿١٨﴾

இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் வலதுபுறத்தில் உள்ளவர்களாவர்

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿١٩﴾

நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்களை நிராகரிப்பவர்கள்தாம் இடதுபுறத்தில் உள்ளவர்களாவர். عليهم نار مؤصدة

عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ ﴿٢٠﴾

மறுமை நாளில் அவர்களின்மீது மூடப்பட்டுள்ள நெருப்பு இருக்கும். அதில் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · Al-Balad — البلد

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்