قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ ﴿١﴾
தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே!
முகப்பு›விளக்கம்›Al-Kaafiroon (109)
மக்கீ · 6 வசனங்கள்
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ ﴿١﴾
தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே!
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾
நீங்கள் வணங்கும் சிலைகளை நான் தற்போதும் எதிர்காலத்திலும் ஒரு போதும் வணங்கமாட்டேன்
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ ﴿٣﴾
நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல
وَلَآ أَنَا۠ عَابِدٌۭ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾
நீங்கள் வணங்கும் சிலைகளை நான் வணங்கக்கூடியவன் அல்ல
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ ﴿٥﴾
நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல. لكم دينكم ولىدين
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ ﴿٦﴾
உங்களுக்கு நீங்கள் உங்களுக்காக உருவாக்கிக் கொண்ட மார்க்கம். எனக்கு அல்லாஹ் என்மீது இறக்கிய மார்க்கம். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை