முகப்புவிளக்கம்Abasa (80)

விளக்கம் Abasa (80) — عبس

மக்கீ · 42 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

عَبَسَ وَتَوَلَّىٰٓ ﴿١﴾

அல்லாஹ்வின் தூதர் முகம் கடுகடுத்தார்; புறக்கணித்தார்,

أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ ﴿٢﴾

நேர்வழியை நாடி அப்துல்லாஹ் இப்னு உம்மீ மக்தூம் அவரிடம் வந்ததற்காக. பார்வையற்றவராக இருந்த அவர் தூதர் இணைவைப்பாளர்களின் தலைவர்கள் நேர்வழி பெறவேண்டுமென்று ஆசைகொண்டவராக அவர்களை அழைப்பதில் ஈடுபட்டிருந்த போது வந்தார்

وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ﴿٣﴾

தூதரே!- உமக்கு என்னதெரியும்? இந்தப் பார்வையற்றவர் பாவங்களிலிருந்து தூய்மை பெறலாம்

أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ ﴿٤﴾

அல்லது அவர் உம்மிடமிருந்து செவியேற்கும் அறிவுரைகளைக்கொண்டு பயன்பெறலாம்

أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ ﴿٥﴾

யார் நீர் கொண்டுவந்ததன்மீது நம்பிக்கைகொள்ளாமல் செல்வமிருப்பதால் தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ. فأنت له تصد

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ﴿٦﴾

நீர் அவன் பக்கம் முன்னோக்குகின்றீர். وما عليك أل ايز كى

وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ﴿٧﴾

அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி பாவங்களிலிருந்து தூய்மையடையவில்லையெனில் உமக்கு என்னதான் நேரப்போகிறது?

وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ ﴿٨﴾

யார் நன்மையைத் தேடியவராக உம் பக்கம் ஓடோடி வந்தாரோ. وهو يخش

وَهُوَ يَخْشَىٰ ﴿٩﴾

அவர் தம் இறைவனைஅஞ்சியவராகவும் இருக்கின்றார். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் فأنت عنه تله

فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ﴿١٠﴾

நீர் அவரின்பால் பராமுகமாக இருந்து அவர் அல்லாத இணைவைப்பாளர்களின் தலைவர்களின் பக்கம் கவனம் செலுத்துகின்றீர்

كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ ﴿١١﴾

விஷயம் அவ்வாறு அல்ல. நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலுமாகும்

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ﴿١٢﴾

யார் அல்லாஹ்வை நினைவுகூர விரும்புவாரோ அவரே அவனை நினைவுகூர்ந்து இந்தக் குர்ஆனில் உள்ளவற்றின் மூலம் அறிவுரை பெறுவார். فى صحف م كرمة

فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ ﴿١٣﴾

இந்தக் குர்ஆன் வானவர்களிடத்தில் கண்ணியமான ஏடுகளில் உள்ளது. م رفوعة م طه رة

مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ ﴿١٤﴾

அவை உயரமான இடத்திலிருக்கும் உயர்வானவை; அசுத்தம் எதுவும் அண்டாத அளவுக்குத் தூய்மையானவை. بأ يدى سفرة

بِأَيْدِى سَفَرَةٍۢ ﴿١٥﴾

அவை வானவர்களில் உள்ள தூதர்களின் கைகளில் இருக்கின்றன. كرام بررة

كِرَامٍۭ بَرَرَةٍۢ ﴿١٦﴾

அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் கண்ணியமானவர்கள், நன்மையான செயல்களை, வணக்கவழிபாடுகளை அதிகம் செய்யக்கூடியவர்கள்

قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ ﴿١٧﴾

நிராகரித்த மனிதன்மீது சாபம் உண்டாகட்டும். அவன் அல்லாஹ்வை எவ்வளவு கடுமையான நிராகரிக்கிறான்! من أى شىء خلقه

مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ ﴿١٨﴾

அவனை அல்லாஹ் எப்பொருளிலிருந்து படைத்தான், பூமியில் கர்வம்கொண்டு அவனை நிராகரிப்பதற்கு? بلغ குர்ஆன் · தஃப்ஸீர் من نطفة خلقه فقدره

مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ﴿١٩﴾

சிறிது நீரிலிருந்து அவன்மனிதனைப் படைத்தான்.அவனது படைப்பை ஒவ்வொரு கட்டம் கட்டமாக நிர்ணயம் செய்தான்

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ﴿٢٠﴾

பின்னர் இந்த நிலைகளுக்குப் பிறகு தன் தாயின் வயிற்றிலிருந்து வெளிப்படுவதை அவனுக்கு எளிதாக்கினான். ثم أماته فأقبره

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ ﴿٢١﴾

பின்னர் உலகில் அவனுக்கு வாழ்நாளின் வயதை நிர்ணயித்த பிறகு அவனை மரணிக்கச் செய்தான். மீண்டும் எழுப்பப்படும் வரை அவன் தங்கியிருக்கும் மண்ணறையை அவனுக்காக ஏற்படுத்தினான்

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ﴿٢٢﴾

பின்னர் அவன் நாடும் போது விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் அவனை உயிர்கொடுத்து எழுப்புகிறான்

كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ ﴿٢٣﴾

இந்த நிராகரிப்பாளன் தான் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டதாக எண்ணுகிறான். அவ்வாறு அல்ல விடயம். அவன் அல்லாஹ் தன்மீது கடமையாக்கிய கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை

فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ﴿٢٤﴾

அல்லாஹ்வை நிராகரித்த மனிதன் தான் உண்ணுகின்ற உணவைப் பார்க்கட்டும், அது எவ்வாறு கிடைத்தது ب என்று

أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا ﴿٢٥﴾

அதன் மூலம், வானத்திலிருந்து பலமாக, அடர்த்தியாகப்ق பொழியும் மழையே

ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا ﴿٢٦﴾

பின்னர் பூமியைப் பிளந்தோம்.அதிலிருந்து தாவரம்ب முளைக்கிறது. فأنبتنا فيها ح ا

فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا ﴿٢٧﴾

அதில் நாம் கோதுமை, சோளம் போன்ற ஏனைய தானியங்களையும் முளைக்கச் செய்தோம். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் وعنبا وقض با

وَعِنَبًۭا وَقَضْبًۭا ﴿٢٨﴾

திராட்சையையும், அவர்களின் கால்நடைகளுக்கு தீவனமாக அமையும் பொருட்டு பச்சைக் காய்கறிகளையும் முளைக்கச் செய்தோம். وزيتونا ونخلا

وَزَيْتُونًۭا وَنَخْلًۭا ﴿٢٩﴾

அதில் ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்

وَحَدَآئِقَ غُلْبًۭا ﴿٣٠﴾

அதில் அடர்ந்த மரங்களுடைய தோட்டங்களையும்ب முளைக்கச் செய்தோம். وفكهة وأ ا

وَفَـٰكِهَةًۭ وَأَبًّۭا ﴿٣١﴾

பழங்களையும் உங்கள்கால்நடைகள்மேயக்கூடியதையும் நாம் விளையச் செய்தோம். م تعا ل كم ولأنعمكم

مَّتَـٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ ﴿٣٢﴾

உங்களுக்கும் உங்கள்கால்நடைகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ﴿٣٣﴾

காதுகளைச் செவிடாக்கும் பெரும் சப்தமானஇரண்டாவது சூர் ஊதப்பட்டால்

يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ ﴿٣٤﴾

அந்த நாளில் மனிதன் தன் சகோதரனைவிட்டும் விரண்டோடுவான். وأمه وأ بيه

وَأُمِّهِۦ وَأَبِيهِ ﴿٣٥﴾

தன் தாய், தந்தையரை விட்டும் விரண்டோடுவான். وصحبته وبنيه

وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ ﴿٣٦﴾

தன் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டும் வெருண்டோடுவான்

لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ ﴿٣٧﴾

அந்த நாளின் துன்பத்தின் கடுமையினால் ஒவ்வொருவரும் மற்றவரில் கவனம் செலுத்த முடியாது. بلغ குர்ஆன் · தஃப்ஸீர் وجوه يومئذ م سفرة

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ ﴿٣٨﴾

அந்நாளில் நற்பாக்கியசாலிகளின் முகங்கள் பிரகாசமானதாக இருக்கும். ضاحكة م ستبشرة

ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ ﴿٣٩﴾

அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்தியுள்ள அவனின் அருளினால் சிரித்தவையாக, மகிழ்ச்சியானவையாக இருக்கும். ووجوه يومئذ عليها غبرة

وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ ﴿٤٠﴾

அந்நாளில் துர்பாக்கியசாலிகளின் முகங்கள் புழுதிபடிந்தவையாக இருக்கும். ترهقها قترة

تَرْهَقُهَا قَتَرَةٌ ﴿٤١﴾

இருள் அவற்றைக் சூழ்ந்திருக்கும்

أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ ﴿٤٢﴾

இந்நிலைமையில் வர்ணிக்கப்பட்ட இவர்கள்தாம் நிராகரிப்பிலும் பாவங்களிலும் ஒன்று சேர்ந்தவர்கள். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · Abasa — عبس

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்