إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾
சூரியன் ஒன்றுசேர்க்கப்பட்டு அதன் ஒளி சென்றுவிடும்போது
முகப்பு›விளக்கம்›At-Takwir (81)
மக்கீ · 29 வசனங்கள்
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾
சூரியன் ஒன்றுசேர்க்கப்பட்டு அதன் ஒளி சென்றுவிடும்போது
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ ﴿٢﴾
நட்சத்திரங்கள் வீழ்ந்து அவற்றின் ஒளி அழிந்துவிடும்போது
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾
மலைகள்தம் இடங்களிலிருந்து இடம்பெயர்க்கப்படும் போது
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾
மக்கள் பெறுவதற்கு போட்டி போட்டுக்கொள்ளும் கருவுற்ற ஒட்டகங்கள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்படும்போது
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ ﴿٥﴾
வனவிலங்குகள் மனிதர்களுடன் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டப்படும்போது
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ ﴿٦﴾
கடல்கள் எரிக்கப்பட்டு நெருப்பாகி விடும்போது
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ ﴿٧﴾
உயிர்கள் அதற்கு இணையானவற்றுடன் ஒன்றுசேர்க்கப்படும் போது, தீயவர்கள் தீயவர்களுடனும் இறையச்சமுடையவர்கள் இறையச்சமுடையவர்களுடன் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ ﴿٨﴾
8,9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையிடம் (உன்னைக் கொன்றவன் எந்த குற்றத்திற்காக கொன்றான் என்று) அல்லாஹ் கேட்கும்போது. بأى ذنب قتلت
بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ ﴿٩﴾
“உன்னைக் கொன்றவன் எந்த குற்றத்திற்காக கொன்றான். بلغ குர்ஆன் · தஃப்ஸீர்
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ ﴿١٠﴾
ஒவ்வொருவரும் தம் செயல்பதிவேட்டை படிக்க வேண்டும் என்பதற்காக, அடியார்களின் செயல்பதிவேடுகள் விரிக்கப்படும் போது
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ ﴿١١﴾
ஆட்டிலிருந்து தோல் கழற்றப்படுவது போன்று வானம் கழற்றப்படும் போது
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ ﴿١٢﴾
நெருப்பு மூட்டப்படும் போது
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ ﴿١٣﴾
சுவனம் இறையச்சமுடையோருக்காகஅருகில் கொண்டுவரப்படும் போது
عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ ﴿١٤﴾
இவை நிகழும்போது ஒவ்வொருவரும் அந்த நாளுக்காக முற்படுத்தி வைத்த செயல்களை அறிந்துகொள்வார்கள்
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ ﴿١٥﴾
இரவில் வெளிப்படுவதற்கு முன் மறைந்து காணப்படும் நட்சத்திரங்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ ﴿١٦﴾
அவை தமது பாதைகளில் ஓடுகின்றன. மேலும் மான்கள் தம் இல்லங்களில் பிரவேசித்து மறைவது போல அவை பொழுது விடியும் போது மறைகின்றன
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ ﴿١٧﴾
முன்னோக்கி வரும் இரவின் ஆரம்பத்தைக் கொண்டும் பின்னோக்கிச் செல்லும் இரவின் இறுதியைக் கொண்டும் அவன்சத்தியம் செய்கின்றான்
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ ﴿١٨﴾
பிரகாசமான காலைப் பொழுதைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் إنه لقول رسول كريم
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ ﴿١٩﴾
நிச்சயமாக முஹம்மது மீது இறக்கப்பட்ட குர்ஆன் இறைவன் நம்பிக்கைக்குரியவராக எடுத்துக்கொண்ட ஜிப்ரீல் என்னும் வானவரால் எடுத்துரைக்கப்பட்ட அல்லாஹ்வின்பேச்சாகும்
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ ﴿٢٠﴾
அவர் பலம் மிக்கவர், அர்ஷின்இறைவனிடத்தில் பெரும் அந்தஸ்துடையவர். مطاع ثم أمين
مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ ﴿٢١﴾
வானத்திலுள்ளவர்கள் அவருக்குக் கட்டுப்படுகிறார்கள். தான் எடுத்துரைக்கும் வஹியில் அவர் நம்பிக்கைக்குரியவர். وما صاحبكم بمجنون
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ ﴿٢٢﴾
நீங்கள் அபாண்டமாக இட்டுக்கட்டி வாதிடுவது போல உங்களோடு சேர்ந்து இருக்கும் முஹம்மது பைத்தியக்காரர் அல்ல.அவரது அறிவையும் வாய்மையையும் அமானிதத்தையும் நீங்கள்அறிவீர்கள்
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ ﴿٢٣﴾
உங்களின்தோழர் தெளிவானஅடிவானத்தில் ஜிப்ரீலை அவரது இயல்பானதோற்றத்தில் கண்டார்
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ ﴿٢٤﴾
உங்களின் தோழர் தமக்குக் கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைக்காமல் கஞ்சத்தனம் செய்பவர் அல்ல. ஜோதிடர்கள்கூலி பெறுவதுபோல கூலி பெறுபவரும் அல்ல. وما هوبقول شيطن رجيم
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍۢ رَّجِيمٍۢ ﴿٢٥﴾
இந்த குர்ஆன் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்ட ஷைத்தானின் வாக்கும் அல்ல. فأ ين تذهبون
فَأَيْنَ تَذْهَبُونَ ﴿٢٦﴾
இவ்வளவு ஆதாரங்களுக்குப் பிறகும் நிச்சயமாக இது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது என்பதை மறுப்பதற்கு நீங்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்? إن هو إل اذكر للعلمين
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَـٰلَمِينَ ﴿٢٧﴾
இந்த குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களுக்கு நினைவூட்டலும் அறிவுரையுமேயாகும். بلغ குர்ஆன் · தஃப்ஸீர்
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ﴿٢٨﴾
உங்களில் யார் சத்தியப் பாதையில் செல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கு
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ ﴿٢٩﴾
படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நேர்வழியில் செல்லவோ, இன்னபிற வழிகளில் செல்லவோ உங்களால் நாட முடியாது. ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை