முகப்புவிளக்கம்An-Naazi'aat (79)

விளக்கம் An-Naazi'aat (79) — النازعات

மக்கீ · 46 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًۭا ﴿١﴾

நிராகரிப்பாளர்களின் உயிர்களை கடுமையாகப், பலவந்தமாக பற்றியிழுக்கும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்

وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًۭا ﴿٢﴾

நம்பிக்கையாளர்களின் உயிர்களை இலகுவாக, மென்மையாகக் கைப்பற்றும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்

وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًۭا ﴿٣﴾

அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு வானத்திலிருந்து பூமியை நோக்கி நீந்திச் செல்லும் வானவர்களைக்கொண்டு அவன்சத்தியம் செய்கின்றான்

فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًۭا ﴿٤﴾

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் தம்மில் சிலரை முந்திக்கொண்டு செயற்படும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்துள்ளான்

فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا ﴿٥﴾

அடியார்களின் செயல்களுக்கு பொறுப்புச்சாட்டப்பட்ட வானவர்களைப் போன்ற அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டே தீருவார்கள் என்பதற்கே இவையனைத்தின் மீதும் அவன் சத்தியம் செய்துள்ளான்

يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ﴿٦﴾

முதல் முறை சூர் ஊதப்படும்போது பூமிகுலுங்கிவிடும் நாளில்

تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿٧﴾

அதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையும் சூர் ஊதப்படும். قلوب يومئذ واجفة

قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ ﴿٨﴾

அந்த நாளில் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் உள்ளங்கள் பயந்து கொண்டிருக்கும். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் أ بص رها خشعة

أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌۭ ﴿٩﴾

அவர்களின் பார்வையில் இழிவின் அடையாளம் காணப்படும்

يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ﴿١٠﴾

“நாம் இறந்தபிறகு மீண்டும் வாழ்க்கையின்பக்கம் திரும்புவோமோ? என்று கேட்பவர்களாக இருக்கிறார்கள்: أءذا كنا عظما ن خرة

أَءِذَا كُنَّا عِظَـٰمًۭا نَّخِرَةًۭ ﴿١١﴾

நாம் உக்கிய எலும்புகளாகிவிட்டாலும் அதன்பிறகு திரும்புவோமா?” قالوا تلك إذا كرة خاسرة

قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ ﴿١٢﴾

அவர்கள் கூறுவார்கள்: “நாம் திரும்பினால் அந்த திரும்புதல் நஷ்டம்தான். அவ்வாறு திரும்புபவன் ஏமாற்றத்திற்குள்ளானவனாவான். فإ ن ما هى زجرة وحدة

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ ﴿١٣﴾

மீண்டும் எழுப்பப்படுவது இலகுவானது. நிச்சயமாக சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவரிடமிருந்து வெளிப்படும் ஒரேயொரு பெரும் சப்தம்தான்

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿١٤﴾

உடனே பூமியின் வயிற்றில் இறந்துகிடக்கின்ற அனைவரும் அதன் மேற்பரப்பில் உயிர்பெற்றவர்களாகி விடுவார்கள்

هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿١٥﴾

தூதரே!- தனது இறைவனுடனும் தனது எதிரியான பிர்அவ்னுடனும் மூஸாவுக்கு நடந்த சம்பவம் உம்மிடம் வந்ததா?

إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ﴿١٦﴾

அவரது இறைவன் அவரை துவா என்ற புனிதமான பள்ளத்தாக்கில் அழைத்தபோது

ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿١٧﴾

அவருக்கு அல்லாஹ் மேலும் கூறினான்: “ஃபிர்அவ்னிடம் செல்வீராக. நிச்சயமாக அவன் அநியாயம் செய்வதிலும் கர்வம் கொள்வதிலும் வரம்புமீறிவிட்டான்.” بلغ குர்ஆன் · தஃப்ஸீர்

فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿١٨﴾

அவனிடம் கேட்பீராக: “-ஃபிர்அவ்னே!- நீ நிராகரிப்பிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தூய்மையடைய விரும்புகிறாயா?” وأهديك إلى ربك فتخش

وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ﴿١٩﴾

நான் உன்னைப் படைத்துப் பராமரிக்கும் இறைவனின்பால் உனக்கு வழிகாட்டுகிறேன். நீ அவனை அஞ்சி அவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து அவனைக் கோபத்திலாழ்த்தும் காரியங்களை விட்டும் விலகியிரு.”

فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ ﴿٢٠﴾

மூஸா அவனுக்கு தாம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்பதை அறிவிக்கக்கூடிய மிகப் பெரிய சான்றினைக் காட்டினார். அது கையும் கைத்தடியுமாகும். فكذ ب وعص

فَكَذَّبَ وَعَصَىٰ ﴿٢١﴾

ஆனால் ஃபிர்அவ்ன் அந்த சான்றினை பொய்ப்பித்தான். மூஸா அவனுக்குக் கட்டளையிட்டதற்கு மாறாகவே நடந்தான். ثم أدبر يسعى

ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ﴿٢٢﴾

பின்னர் மூஸா நபி கொண்டுவந்தவற்றை விசுவாசம்கொள்ளாமல், பாவத்திலும் சத்தியத்துக்கு மாறுசெய்வதிலும் ஈடுபட்டவனாக புறக்கணித்தான். فحشر فناد

فَحَشَرَ فَنَادَىٰ ﴿٢٣﴾

மூஸாவை வெற்றி கொள்ள தனது கூட்டத்தையும் தன்னைப் பின்பற்றுவோரையும் ஒன்றுதிரட்டினான். பின்வருமாறு கூறி அழைப்புவிடுத்தான்

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ ﴿٢٤﴾

“நான்தான் உங்களின் உயர்வான இறைவன். எனவே என்னைத் தவிர நீங்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.”

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ ﴿٢٥﴾

அல்லாஹ் அவனைப் பிடித்தான். உலகில் கடலில் மூழ்கடித்தும் மறுமையில் கொடிய வேதனையில் பிரவேசிக்கச் செய்தும் அவனைத் தண்டித்தான். بلغ குர்ஆன் · தஃப்ஸீர்

إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ ﴿٢٦﴾

நிச்சயமாக நாம் ஃபிர்அவ்னை இவ்வுலகிலும் மறுவுலகிலும் தண்டித்ததில் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவனுக்கு அறிவுரை இருக்கின்றது. அவர்தாம் அறிவுரைகளைக்கொண்டு பயனடைவார்

ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا ﴿٢٧﴾

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்களே!- உங்களைப் படைப்பது அல்லாஹ்வுக்குச் சிரமமானதா? அல்லது அவன்படைத்திருக்கும் வானத்தைஉருவாக்குவதா? رفع سمكها فسوىها

رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ﴿٢٨﴾

அதன் முகட்டை உயரமாக்கி எந்தக் குறைபாடும் பிளவும் இல்லாதவாறு அதனை செவ்வையாக்கினான். وأغطش ليلها وأخرج ضحىها

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا ﴿٢٩﴾

அதிலுள்ள சூரியன் மறைந்தவுடன் அதன் இரவை இருளாக்கி அது உதித்தவுடன் அதன் பிரகாசத்தை வெளிப்படுத்தினான்

وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿٣٠﴾

அவன் வானத்தைப் படைத்த பிறகு பூமியை விரித்தான். அதில் பயன்தரக்கூடியவற்றை உண்டாக்கினான்

أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا ﴿٣١﴾

அதிலிருந்து அதன் நீரை ஓடும் ஊற்றுகளாக வெளிப்படுத்தினான். அதில் கால்நடைகள் மேயக்கூடிய தாவரங்களை முளைக்கச் செய்தான்

وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا ﴿٣٢﴾

மலைகளை பூமியின்மீது உறுதியானவையாக ஆக்கினான். متعا ل كم ولأنعمكم

مَتَـٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ ﴿٣٣﴾

மனிதர்களே!- இவையனைத்தும் உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கும் பொருட்டேயாகும். இவையனைத்தையும் படைத்தவன் அவர்களை மீண்டும் புதிதாக படைப்பதற்கு இயலாதவன் அல்ல

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ ﴿٣٤﴾

அனைத்தையும் தன் பயங்கரத்தால் மூடிக்கொள்ளும் இரண்டாவது முறை சூர் ஊதப்பட்டு, மறுமை நிலைபெற்று விடும் போது. بلغ குர்ஆன் · தஃப்ஸீர்

يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ ﴿٣٥﴾

அது ஏற்படும் நாளில் மனிதன் தான் செய்த நற்செயல்கள், தீயசெயல்கள் அனைத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பான்

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿٣٦﴾

நரகம் கொண்டுவரப்படும்.அது பார்ப்பவர்களுக்காககாணும் வகையில் வெளிப்படுத்தப்படும். فأما من طغى

فَأَمَّا مَن طَغَىٰ ﴿٣٧﴾

யார் வழிகேட்டில் வரம்புமீறினாரோ

وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿٣٨﴾

நிலையான மறுமை வாழ்வை விட்டுவிட்டு அழியக்கூடிய உலக வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ

فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿٣٩﴾

நிச்சயமாக நரகமே அவர் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும்

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ ﴿٤٠﴾

فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿٤١﴾

யார் தம் இறைவனின் முன் நிற்பதை அஞ்சி அவன் தடுத்த மன இச்சையிலிருந்து தம் மனதைத் தடுத்துக் கொண்டாரோ நிச்சயமாக சுவர்க்கமே அவர் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும்

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ﴿٤٢﴾

தூதரே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இவர்கள் “மறுமை எப்போது நிகழும்” என்று உம்மிடம் கேட்கிறார்கள்

فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ﴿٤٣﴾

நீர் அவர்களுக்கு அதுகுறித்து கூறுவதற்கு உமக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. அதுகுறித்து அறிவிப்பது உம்முடைய விடயமல்ல. அதற்காக தயார்படுத்திக் கொள்வதே உமது பணியாகும்

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿٤٤﴾

மறுமை குறித்தமுழுமையானஅறிவு உம் இறைவனிடம் மட்டுமே உள்ளது. بلغ குர்ஆன் · தஃப்ஸீர்

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ﴿٤٥﴾

நீர் மறுமையை அஞ்சக்கூடியவருக்கு எச்சரிப்பவர் மட்டுமே ஆவீர். ஏனெனில் அவர்தான் உமது எச்சரிக்கையைக்கொண்டு பயனடைவார்

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا ﴿٤٦﴾

அவர்கள் மறுமை நாளைக் காணும் நாளில் அவர்கள் தங்களின் உலக வாழ்க்கையில் ஒருநாளின் மாலைப்பொழுதோ அல்லது காலைப்பொழுதோதான் அங்கு தங்கியிருந்ததாகத் தோன்றும். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · An-Naazi'aat — النازعات

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்