முகப்புவிளக்கம்Al-Aadiyaat (100)

விளக்கம் Al-Aadiyaat (100) — العاديات

மக்கீ · 11 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًۭا ﴿١﴾

வேகமாக மூச்சிறைத்து சத்தத்தை வெளிப்படுத்தி ஓடும் குதிரைகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்

فَٱلْمُورِيَـٰتِ قَدْحًۭا ﴿٢﴾

தன் குளம்புகளால் பாறைகளில் கடுமையாக உரசுவதால் தீப்பொறியை உண்டாக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ﴿٣﴾

அதிகாலை நேரத்தில் எதிரிகளின்மீது தாக்குதல் தொடுக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். فأثرن به نقعا

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴿٤﴾

அவை தாம் ஓடும்போது புழுதியைக் கிளப்புகின்றன. فوسطن به جمعا

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿٥﴾

வீரர்களுடன் அவை எதிரிகளிடையே கூட்டமாக நுழைந்து விடுகின்றன

إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ﴿٦﴾

நிச்சயமாக மனிதன் தன் இறைவன் தன்னிடமிருந்து விரும்பும் நன்மையை தடுத்துக்கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் وإنه عل ذلك لشهيد

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ﴿٧﴾

அவன் நன்மையைத் தடுப்பதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அது தெளிவாக இருப்பதால் அவனால் அதனை மறுக்க முடியாது

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾

நிச்சயமாக அவன் செல்வத்தின் மீதுள்ள மோகத்தினால் அதில் கஞ்சத்தனம் செய்கிறான்

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿٩﴾

இவ்வுலக வாழ்க்கையில் மயங்கிய இந்த மனிதன், அல்லாஹ் மண்ணறைகளில் உள்ளவர்களை உயிர்கொடுத்து எழுப்பி, பூமியிலிருந்து அவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் வெளியேற்றும் போது விஷயம் அவன் எண்ணியது போல் இருக்காது என்பதை அறியவில்லையா?

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿١٠﴾

உள்ளங்களிலுள்ள எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற விஷயங்களெல்லாம் வெளிப்படுத்தப்படும் தெளிவாக்கப்படும். إن رب هم بهم يومئذ ل خبير

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ ﴿١١﴾

நிச்சயமாக அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். தன் அடியார்களின் விடயம் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அதற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · Al-Aadiyaat — العاديات

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்