முகப்புவிளக்கம்Ad-Dhuhaa (93)

விளக்கம் Ad-Dhuhaa (93) — الضحى

மக்கீ · 11 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

وَٱلضُّحَىٰ ﴿١﴾

அல்லாஹ் முற்பகலைக்கொண்டு சத்தியம் செய்கின்றான்

وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾

அவன் இரவைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். அது இருளாகி மக்கள் நடமாடுவதை விட்டும் ஓய்வெடுக்கும் போது, ما ودعك ربك وما قل

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾

தூதரே!- வஹி குறிப்பிட்ட காலம்வரை வராமல் இருந்ததனால் இணைவைப்பாளர்கள் கூறுவதுபோன்று உம் இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை

وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ ﴿٤﴾

என்றும் முடிவுடையாத நிலையான இன்பத்தைக் கொண்டிருப்பதால் மறுமையின் வீடே உமக்கு உலகத்தைவிடச் சிறந்ததாகும்

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ ﴿٥﴾

விரைவில் உம் இறைவன் உமக்கும் உம் சமூகத்திற்கும் அவன் கொடுத்ததைக்கொண்டு நீர் திருப்தியடையும் வகையில் பெரும் நன்மைகளை உமக்கும் உமதுசமூகத்திற்கும் வழங்குவான். ألم يجدك يتيما فٔاو

أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ ﴿٦﴾

நீர் அநாதையாக இருப்பதைக் கண்டு உமக்கு ஒரு புகலிடத்தை ஏற்படுத்தினான். உம்மீது உம் பாட்டனார் அப்துல் முத்தலிபும் பின்னர் சிறிய தந்தை அபூதாலிபும் அன்பு செலுத்தினார்கள். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் ل

وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ ﴿٧﴾

ஈமான் என்றால் என்ன? வேதம் என்றால் என்ன? என்பதை அறியாதவராக உம்மைக் கண்ட அவன், நீர் அறியாமல் இருந்தவற்றையெல்லாம் உமக்குக் கற்றுக் கொடுத்தான்

وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ ﴿٨﴾

உம்மைத் தேவையுடையவராகக் கண்டு, உம்மைத் வசதியுடையவராக ஆக்கினான்

فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ ﴿٩﴾

ஆகவே சிறுவயதில் தந்தையை இழந்தவரிடம் மோசமாக நடந்துகொள்ளாதீர். அவனை இழிவுபடுத்திவிடாதீர்

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ ﴿١٠﴾

தேவையோடு யாசிப்பவரை விரட்டிவிடாதீர். وأم ابنعمة ربك فحدث

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿١١﴾

அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவீராக. அவற்றை எடுத்துரைப்பீராக. ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · Ad-Dhuhaa — الضحى

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்