أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ ﴿١﴾
தூதரே!- அப்ரஹாவும் அவனது தோழர்களான யானைப் படையினரும் கஅபாவை இடிக்க நாடியபோது உமது இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா? ألم يجعل كيدهم فى تضليل
முகப்பு›விளக்கம்›Al-Fil (105)
மக்கீ · 5 வசனங்கள்
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ ﴿١﴾
தூதரே!- அப்ரஹாவும் அவனது தோழர்களான யானைப் படையினரும் கஅபாவை இடிக்க நாடியபோது உமது இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா? ألم يجعل كيدهم فى تضليل
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ ﴿٢﴾
அதனை இடிப்பதற்கான அவர்களின் தீய சூழ்ச்சியை அல்லாஹ் தோல்வியடையச்செய்தான். அதனால் கஅபாவை விட்டும் மக்களைத் திருப்பிவிட வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. அதில் எதனையும் அவர்களால் தொடக்கூட முடியவில்லை. وأرسل عليهم طيرا أبابيل
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾
அல்லாஹ் அவர்களுக்கு எதிராக பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். ترميهم بحجارة من سجيل
تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ ﴿٤﴾
அது களிமண் கற்களை அவர்கள்மீது எறிந்தன. فجعلهم كعصف م أكول
فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ ﴿٥﴾
அல்லாஹ் அவர்களை விலங்குகள் தின்று மிதித்துவிட்ட வைக்கோலைப் போன்று ஆக்கிவிட்டான். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை