وَٱلطُّورِ ﴿١﴾
அல்லாஹ் எந்த மலை மீதிருந்து மூஸாவுடன் பேசினானோ அந்த மலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். وكتب م سطور
முகப்பு›விளக்கம்›At-Tur (52)
மக்கீ · 49 வசனங்கள்
وَٱلطُّورِ ﴿١﴾
அல்லாஹ் எந்த மலை மீதிருந்து மூஸாவுடன் பேசினானோ அந்த மலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். وكتب م سطور
وَكِتَـٰبٍۢ مَّسْطُورٍۢ ﴿٢﴾
2,3. எழுதப்பட்ட புத்தகமான குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ் சத்தியம் செய்கின்றான். فى رق منشور
فِى رَقٍّۢ مَّنشُورٍۢ ﴿٣﴾
(முன்னர்) இறக்கப்பட்ட வேதங்களைப் போன்று விரிக்கப்பட்ட காகிதத்தில்
وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ ﴿٤﴾
வானத்தில் வானவர்கள்அல்லாஹ்வை வணங்குவதன்மூலம் செழிப்பாக்கும் ஆலயத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்
وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ ﴿٥﴾
பூமிக்கு முகடாக இருக்கின்ற உயரமான வானத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்
وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ ﴿٦﴾
நீரால் நிரம்பியுள்ள கடலைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான். إن عذاب ربكلوقع
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌۭ ﴿٧﴾
தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் அளிக்கும் வேதனை நிராகரிப்பாளர்களின்மீது சந்தேகம் இல்லாமல் நிகழ்ந்தே தீரும். ما له من دافع
مَّا لَهُۥ مِن دَافِعٍۢ ﴿٨﴾
அதனை அவர்களை விட்டும் தடுக்கக்கூடியவரோ, அது அவர்கள் மீது இறங்காமல் தடுப்பவரோ யாரும் இல்லை
يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًۭا ﴿٩﴾
மறுமை நாளைஅறிவிக்கும் விதமாகவானம் ஆட்டம் காணும் நாளில் بلغ குர்ஆன் · தஃப்ஸீர்
وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًۭا ﴿١٠﴾
மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து நகர்ந்து செல்லும். فويل يومئذ للمكذبين
فَوَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿١١﴾
அந்த நாளில் அல்லாஹ்பொய்ப்பிப்பாளர்களுக்கு வாக்களித்த வேதனையை மறுத்தவர்களுக்கு அழிவும் இழப்புமே உண்டாகும்
ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍۢ يَلْعَبُونَ ﴿١٢﴾
அவர்கள் வீணான விஷயங்களில் மூழ்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள். மறுமையைக் குறித்தோ மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதைக் குறித்தோ அவர்கள் பொருட்படுத்தவில்லை. يوم يدع ون إلى نار جهنمدعا
يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا ﴿١٣﴾
அவர்கள் நரக நெருப்பில் பலமாகத் தள்ளப்படும் நாளில்
هَـٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ ﴿١٤﴾
அவர்களைப் பழிக்கும்விதமாக அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் உங்களின் தூதர்கள் உங்களுக்கு அச்சமூட்டிய நரகமாகும். இதைத்தான் நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்
أَفَسِحْرٌ هَـٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ ﴿١٥﴾
நீங்கள்காணும் இந்தவேதனையும் சூனியமா? அல்லது நீங்கள்அதனைப் பார்க்கவில்லையா?
ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿١٦﴾
இந்த நெருப்பின் வெப்பத்தைச் சுவைத்து அனுபவியுங்கள். நீங்கள் அதன் வெப்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ளுங்கள் அல்லது சகித்துக் கொள்ளாமலிருங்கள். பொறுமைகொள்வதும் பொறுமை கொள்ளாமல் இருப்பதும் இரண்டும் உங்களுக்கு ஒன்றுதான். இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்குத்தான் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍۢ وَنَعِيمٍۢ ﴿١٧﴾
நிச்சயமாக தங்கள் இறைவனின் -கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் என்றும் முடிவுறாத மகத்தான அருட்கொடையிலும் இருப்பார்கள். بلغ குர்ஆன் · தஃப்ஸீர்
فَـٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ ﴿١٨﴾
அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவுப் பொருள்கள், பானங்கள் மற்றும் மண உறவுகளின் இன்பங்களைக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பான். அவர்கள் தாங்கள் விரும்பிய இன்பங்களைப் பெற்று கலங்கம் ஏற்படுத்துபவற்றிலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றி பெறுவார்கள்
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿١٩﴾
அவர்களிடம் கூறப்படும்: “உங்கள் மனம் விரும்புவதை மகிழ்ச்சியாக உண்ணுங்கள், பருகுங்கள், உண்ணுபவற்றினாலோ, பருகுபவற்றினாலோ தீங்கோ, பாதிப்போ ஏற்பட்டு விடும் என்று பயப்படாதீர்கள். இவைகள் நீங்கள் உலகில் செய்த நற்செயல்களுக்கான கூலியாகும்
مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍۢ مَّصْفُوفَةٍۢ ۖ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍۢ ﴿٢٠﴾
அவர்கள் அலங்கரிக்கப்பட்ட, ஒன்றை ஒன்று முன்னோக்கியதாக இருக்கும் சாய்வு இருக்கைகளில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். நாம் அவர்களை விசாலமான விழிகளையுடைய வெண்மையான பெண்களுக்கு மணமுடித்து வைப்போம்
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَـٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَـٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍۢ ۚ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌۭ ﴿٢١﴾
كسب رهين நம்பிக்கையாளர்களையும் நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றிய அவர்களின் சந்ததியினரையும் அவர்களின் சந்ததியினால் அவர்கள் கண்குளிர்ச்சியடையும் பொருட்டு நாம் ஒன்றுசேர்த்து வைப்போம். அந்த சந்ததியினர் தங்கள் செயல்களின் மூலம் முந்தையவர்களின் நிலையை அடையாவிட்டாலும் சரியே. நாம் அவர்களின் நற்செயல்களின் கூலியில் எதையும் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தீய செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். அவனைத்தவிர யாரும் அவனது செயல்களில் எந்த ஒன்றையும் சுமக்க முடியாது. وأمددنهم بفكهة ولحم مما يشتهون
وَأَمْدَدْنَـٰهُم بِفَـٰكِهَةٍۢ وَلَحْمٍۢ مِّمَّا يَشْتَهُونَ ﴿٢٢﴾
இந்த சுவனவாசிகளுக்கு பல வகையான பழங்களையும் அவர்கள் விரும்பும் அனைத்துவிதமான மாமிசத்தையும் நாம் வழங்குவோம். يتنزعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم
يَتَنَـٰزَعُونَ فِيهَا كَأْسًۭا لَّا لَغْوٌۭ فِيهَا وَلَا تَأْثِيمٌۭ ﴿٢٣﴾
அங்கு அவர்களுக்கிடையே மதுக்கிண்ணங்கள் பரிமாறப்படும். அதனைக் குடிப்பதால் உலகில் ஏற்படுவதுபோன்று போதையின் காரணமாக வீணான பேச்சு, பாவமான காரியங்கள் எதுவும் நடைபெறாது
۞ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌۭ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌۭ مَّكْنُونٌۭ ﴿٢٤﴾
அவர்களுக்குப் பணிவிடைக்காக நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களைச் சுற்றி சுற்றி வருவார்கள். தோல் வெண்மையிலும் தெளிவிலும் அவர்கள்சிப்பியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளமுத்துகளைப் போன்றிருப்பா بلغ குர்ஆன் · தஃப்ஸீர் ர்கள்
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ ﴿٢٥﴾
சுவனவாசிகள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள். ஒருவர் மற்றவரிடம் உலகில் அவர்களின் நிலையைக் குறித்துக் கேட்பார்கள்
قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ ﴿٢٦﴾
அவர்கள் பதிலளிப்பார்கள்: “நிச்சயமாக நாங்கள் உலகில் எங்கள் குடும்பத்தினரிடையே அல்லாஹ்வின் வேதனையை அஞ்சக்கூடியவர்களாக இருந்தோம்
فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ ﴿٢٧﴾
அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்து எங்களுக்கு இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டினான். வெப்பம் மிகுந்த வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றினான்
إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ ﴿٢٨﴾
நிச்சயமாக நாங்கள் எங்களின் உலக வாழ்வில் அவனையே வணங்கிக் கொண்டிருந்தோம். நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றும்படி அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். நிச்சயமாக அவன் தன் அடியார்களுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறந்த முறையில் நிறைவேற்றுபவனாகவும் உண்மையாளனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எம்மீது அவனது நலவு, கருணையினால்தான் அவன் எங்களுக்கு நம்பிக்கையின்பால் வழிகாட்டி எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நரகத்தைவிட்டும் தூரமாக்கினான்
فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍۢ وَلَا مَجْنُونٍ ﴿٢٩﴾
தூதரே!- குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக. அல்லாஹ் உம்மீது நம்பிக்கை மற்றும் அறிவு ஆகியவற்றை அருளியிருப்பதால் நீர் ஜின்னைவைத்து சோதிடம் பார்ப்பவராகவும் இல்லை.பைத்தியகாரராகவும் இல்லை
أَمْ يَقُولُونَ شَاعِرٌۭ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ ﴿٣٠﴾
அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் “நிச்சயமாக முஹம்மது தூதர் அல்ல. மாறாக அவர் ஒரு கவிஞர். மரணம் வந்து அவரை வாரிச் சென்றுவிடும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால் அவரிலிருந்து நாம் விடைபெற்றுவிடலாம்” என்று கூறுகிறார்களா?
قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ ﴿٣١﴾
தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் மரணத்தை எதிர்பாருங்கள். என்னை நீங்கள் பொய்ப்பித்ததனால் நானும் உங்கள்மீது இறங்கப்போகும் வேதனையை எதிர்பார்க்கிறேன்.” بلغ குர்ஆன் · தஃப்ஸீர்
أَمْ تَأْمُرُهُمْ أَحْلَـٰمُهُم بِهَـٰذَآ ۚ أَمْ هُمْ قَوْمٌۭ طَاغُونَ ﴿٣٢﴾
மாறாக அவர்களின் அறிவு “நிச்சயமாக அவர் ஒரு ஜோதிடர், பைத்தியக்காரர் என்று கூறத் தூண்டுகிறதா?” அவர்கள் ஒரு மனிதனிடம் சேர்ந்து இருக்க முடியாத விஷயங்களை சேர்த்துக் கூறுகிறார்கள். மாறாக அவர்கள் வரம்புகளை மீறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே மார்க்கத்தின் பக்கமோ, பகுத்தறிவின் பக்கமோ அவர்கள் திரும்ப மாட்டார்கள்
أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ ۚ بَل لَّا يُؤْمِنُونَ ﴿٣٣﴾
அல்லது நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்துள்ளார். அவருக்கு வஹி அறிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்களா? அவர் அதனை சுயமாகப் புனைந்து கூறவில்லை. மாறாக அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்ளும் மக்களாக இருக்கிறார்கள். அதனால் அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்று கூறுகிறார்கள்
فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍۢ مِّثْلِهِۦٓ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ ﴿٣٤﴾
நிச்சயமாக அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்ற கூற்றில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள்அதுபோன்ற செய்தியை புனைந்து கொண்டுவரட்டும்
أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَـٰلِقُونَ ﴿٣٥﴾
அல்லது அவர்கள் அவர்களை படைக்கும் படைப்பாளனின்றி படைக்கப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே அவர்கள் படைத்துக் கொண்டார்களா? படைப்பாளனின்றி எந்தப் படைப்பும் உருவாகிவிட முடியாது. யாரும் தம்மை தாமாகப் படைத்துவிட முடியாது. பிறகு ஏன் அவர்கள் தங்களைப் படைத்தவனை வணங்குவதில்லை?
أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ ﴿٣٦﴾
அல்லது அவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? மாறாக அல்லாஹ்தான் அவர்களைப் படைத்தான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அவனை உறுதியாக நம்பியிருந்தால் அவன் ஒருவனையே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவனுடைய தூதரின்மீது நம்பிக்கைகொண்டிருப்பார்கள்
أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ ﴿٣٧﴾
அல்லது அவர்களிடத்தில் உம் இறைவனின் வாழ்வாதார அருட்களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அவற்றை அவர்கள்தாம் நாடியவர்களுக்குவழங்குகிறார்களா? மேலும் நபித்துவத்தையும் தாம் நாடியவர்களுக்குவழங்கி தாம் நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு அவர்களிடமா நாட்டம் உள்ளது? அல்லது அவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப செயற்படும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களா?
أَمْ لَهُمْ سُلَّمٌۭ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَـٰنٍۢ مُّبِينٍ ﴿٣٨﴾
அல்லது அவர்களிடத்தில் ஏணி இருந்து அதன்மூலம் அவர்கள் வானத்தில் ஏறி அல்லாஹ் அறிவிக்கும் வஹியைச் செவியுற்று நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்துகொண்டார்களா? بلغ குர்ஆன் · தஃப்ஸீர் அவர்களில் அவ்வாறு வஹியைச் செவியுற்றவர் நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக வாதிடுவதற்குத் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவரட்டும்
أَمْ لَهُ ٱلْبَنَـٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ ﴿٣٩﴾
அல்லது அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா? உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகளா? أم تسٔلهم أجرا فهم من مغرم مثقلون
أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًۭا فَهُم مِّن مَّغْرَمٍۢ مُّثْقَلُونَ ﴿٤٠﴾
தூதரே!- உம் இறைவனிடமிருந்து நீர் எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக அவர்களிடம் கூலி கேட்கின்றீரா? அதன் காரணமாக அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு பொறுப்பு சாட்டப்பட்டு விட்டார்களா?
أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ ﴿٤١﴾
அல்லது அவர்களிடத்தில் மறைவான ஞானம் இருந்து அவர்கள் அறியும் மறைவான விடயங்களை மக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறார்களா? அதிலிருந்து தாங்கள் நாடியதை அவர்களுக்கு அறிவிக்கிறார்களா?
أَمْ يُرِيدُونَ كَيْدًۭا ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ ﴿٤٢﴾
அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் உமக்கு எதிராகவும் உம் மார்க்கத்திற்கு எதிராகவும் சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா? அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வீராக. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள்தாம் சூழ்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.நீர் அல்ல
أَمْ لَهُمْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ ۚ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ ﴿٤٣﴾
அல்லது அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இருக்கின்றானா? அவர்கள் இணைத்துக்கூறும் இணைகளிலிருந்து அவன் தூய்மையானவன். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் நிகழவும் இல்லை.நிகழப்போவதும் சாத்தியமில்லை
وَإِن يَرَوْا۟ كِسْفًۭا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًۭا يَقُولُوا۟ سَحَابٌۭ مَّرْكُومٌۭ ﴿٤٤﴾
அவர்கள்வானத்திலிருந்து ஒரு துண்டு கீழே விழுவதைப் பார்த்தாலும் அதைக்குறித்து “வழக்கத்தைப்போன்று ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த மேகங்கள்தான்” என்று கூறுவார்கள். அதனைக் கொண்டு படிப்பினை பெறுவதுமில்லை, நம்பிக்கைகொள்வதுமில்லை
فَذَرْهُمْ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ ﴿٤٥﴾
தூதரே!- அவர்கள் வேதனை செய்யப்படும் நாளான மறுமையைச் சந்திக்கும்வரை அவர்களின் பிடிவாதத்திலும் நிராகரிப்பிலும் அவர்களை விட்டுவிடுவீராக. بلغ குர்ஆன் · தஃப்ஸீர் يوملا يغنى عنهم كيدهم شئا ولا هم ينصرون
يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًۭٔا وَلَا هُمْ يُنصَرُونَ ﴿٤٦﴾
அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள்வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு உதவிசெய்யப்பட மாட்டார்கள். وإن للذين ظلمواعذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًۭا دُونَ ذَٰلِكَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ﴿٤٧﴾
நிச்சயமாக இணைவைத்தல் மற்றும் பாவங்கள் மூலம் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையின் வேதனைக்கு முன்னால் இவ்வுலகில் கொலையும் கைதும் கப்ரில் மண்ணறை வேதனையும் உள்ளது. ஆனாலும் அவர்களில் பெரும்பாலானோர் இதனை அறிய மாட்டார்கள். அதனால்தான் தமது நிராகரிப்பில் நிலைத்திருக்கிறார்கள்
وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ ﴿٤٨﴾
தூதரே!- உம் இறைவனின் தீர்ப்பிற்காக, அவனுடைய மார்க்க சட்டத்திற்காக பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக நீர் நம்முடைய கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கின்றீர். தூக்கத்திலிருந்து எழும் போது உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக
وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَـٰرَ ٱلنُّجُومِ ﴿٤٩﴾
இரவிலும் உம் இறைவனைப் புகழ்வீராக. அவனுக்காகத் தொழுவீராக. பகலின் பிரகாசத்தால் நட்சத்திரங்கள் மறையும் சமயத்தில் அதிகாலைத் தொழுகையைத் தொழுவீராக. ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை