إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ﴿١﴾
வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது, وأذنت لربها وحقت
முகப்பு›விளக்கம்›Al-Inshiqaaq (84)
மக்கீ · 25 வசனங்கள்
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ﴿١﴾
வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது, وأذنت لربها وحقت
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾
அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்குப் பொருத்தமானதாகும்
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ﴿٣﴾
தோலை விரிப்பது போல் பூமியை அல்லாஹ் விரியச் செய்யும் போது وألقت ما فيها وتخلت
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿٤﴾
அது தன்னுள் இருக்குள் பொக்கிஷங்களையும் இறந்தவர்களையும் எறிந்துவிட்டு வெறுமையாகிவிடும். وأذنت لربها وحقت
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٥﴾
அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்கு விதிக்கப்பட்டதாகும்
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَـٰقِيهِ ﴿٦﴾
மனிதனே! நிச்சயமாக நீ நற்செயலோ, தீயசெயலோ செய்யக்கூடியவன். அதற்காக அல்லாஹ் உனக்குக் கூலி வழங்குவதற்காக அதனை நீ மறுமை நாளில் காண்பாய். فأم امن أوتى كتبه بيمينه
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿٧﴾
யாருடைய செயல்பதிவேடு அவரது வலக்கரத்தில் கொடுக்கப்படுமோ. فسوف يحاسب حسابايسيرا
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا ﴿٨﴾
அவரது செயல்களை குற்றம்பிடிக்காமல் அவருக்கு எடுத்துக்காட்டி அல்லாஹ் அவரை இலகுவான முறையில் விசாரணை செய்வான்
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا ﴿٩﴾
அவர் தம் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக திரும்புவார். بلغ குர்ஆன் · தஃப்ஸீர்
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ﴿١٠﴾
யாருடைய செயல்பதிவேடு அவரது முதுகுக்குப் பின்னால் இடக்கரத்தில் கொடுக்கப்படுமோ. فسوف يدعوا ثبورا
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا ﴿١١﴾
அவர் தனக்குத் தானே அழிவைக் கூவி அழைப்பார். ويص ل سعيرا
وَيَصْلَىٰ سَعِيرًا ﴿١٢﴾
அவர் நரக நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴿١٣﴾
நிச்சயமாக அவர் உலகில் தன் நிராகரிப்பு மற்றும் பாவங்கள் என்பவற்றில் ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக இருந்தார். إنه ظن أن لن يحور
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿١٤﴾
நிச்சயமாக அவர் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெறமாட்டார் என்றே எண்ணியிருந்தார்
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا ﴿١٥﴾
ஏனில்லை. நிச்சயமாக அல்லாஹ் அவரை முதன்முறையாகப் படைத்ததுபோன்றே மீண்டும் அவரை வாழ்வின் பக்கம் திருப்புவான். நிச்சயமாக அவரது இறைவன் அவரது நிலையைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. விரைவில் அவரது செயலுக்கேற்ப அவன் அவருக்குக் கூலி வழங்குவான்
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ﴿١٦﴾
சூரியன் மறைந்த பிறகு அடிவானத்தில் தோன்றும் செந்நிறத்தின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ﴿١٧﴾
இரவின் மீதும் அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான்
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿١٨﴾
சந்திரன் மீதும் அது ஒன்று சேர்ந்து பூரண சந்திரனாக ஆவதின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் لتركبن طبقا عن طبق
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ ﴿١٩﴾
மனிதர்களே!- விந்திலிருந்து இரத்தக்கட்டியாக, இரத்தக்கட்டியிலிருந்து சதைத்துண்டாக, வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி, மரணத்திலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நோக்கி நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை நோக்கி நிச்சயம் ஏறிச்செல்வீர்கள். فما لهم لا يؤمنون
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٠﴾
இந்த நிராகரிப்பாளர்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கைகொள்வதில்லையே!
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ﴿٢١﴾
அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் தங்கள் இறைவனுக்காக சிரம்பணிவதுமில்லையே!
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ﴿٢٢﴾
மாறாக நிராகரிப்பாளர்கள் தூதர் தங்களிடம் கொண்டுவந்ததை பொய்யாக்குகிறார்கள்
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣﴾
அவர்களின் உள்ளங்கள் சேர்த்து வைத்திருப்பதை அவன் அறிவான். அவர்கள் செய்யும் செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. فبشرهم بعذاب أليم
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤﴾
தூதரே!- அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்று அறிவித்துவிடுவீராக
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ ﴿٢٥﴾
ஆயினும் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. அவர்களுக்கு சுவனம் என்னும் முடிவுறா நன்மை உண்டு. ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை