முகப்புவிளக்கம்Al-Ikhlaas (112)

விளக்கம் Al-Ikhlaas (112) — الإخلاص

மக்கீ · 4 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ﴿١﴾

தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை

ٱللَّهُ ٱلصَّمَدُ ﴿٢﴾

அவனே தலைவனாவான். அவனிடமே பரிபூரண மற்றும் அழகிய பண்புகளில் தலைமைத்துவம் முடிவடைகிறது. அவனிடமே படைப்பினங்கள் தமது தேவைகளை நிறைவேற்றுமாறு எதிர்பார்க்கின்றன. لم يلد ولم يولد

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾

அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. எனவே அவனுக்கு மகனும் இல்லை; தந்தையும் இல்லை. ولم يكن له كفوا أحد

وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ﴿٤﴾

அவனது படைப்பினங்களில் அவனுக்கு நிகரானது எதுவும் இல்லை. ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · Al-Ikhlaas — الإخلاص

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்